2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மூதூரில் டோன் சிகிச்சை முகாம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்,எஸ்.சசிக்குமார்

இலவச கண் சிகிச்சை மற்றும் முதுகு வலி, மூட்டு வலிக்கான டோன் சிகிச்சை முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

மூதூர் இக்பால் சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில் 300இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

முதுகு வலி மற்றும் மூட்டு வலிக்கு ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட டோன் சிகிச்சை மூதூரில் அதிகமானோருக்கு முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

'இலங்கை டோன் மெதட்' அமைப்பும் பட்டக்கன்னு பவுண்டேஷனும் இணைந்து மூதூர் றிஸானா நபீக் பவுண்டேஷன், மூதூர் மேற்கு ஆர்.டி.எஸ், திரிசீடி ஆகிய அமைப்புக்களின் பங்களிப்புடன் இம் முகாமினை நடத்தியிருந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .