2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மருத்துவ அத்தியட்சகர் ஈ.ஜீ.ஞானகுணாளன் ஓய்வுபெற்றார்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலை பொதுவைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர்,மருத்துவர் ஈ.மருத்துவ அத்தியட்சகர் ஈ.ஜீ.ஞானகுணாளன் ஓய்வுபெற்றார்.ஞானகுணாளன் தமது 30 வருட மருத்துவ சேவையில் இருந்து இன்று 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார்.

அவருக்கு வைத்தியசாலைக்குழுவினால் அவருக்கு சேவை நலன் பாராட்டுடன் இணைந்த பிரியாவிடை வைபவம் திருகோணமலையில் நேற்று நடாத்தப்பட்டது.

வைத்தியசாலைக்குழுவின் தலைவர் பா.உதயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை பணிப்பாளரும் ஓய்வு பெற்றுச்செல்லும் ஞானகுணாளனின் துணைவியாருமான மருத்துவர் திருமதி கௌ.ஞானகுணாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

1983 ஆம் ஆண்டு திருகோணமலை தளவைத்தியசாலையில் தமது மருத்துவப்பணியை ஆரம்பித்த ஞானகுணாளன் மாவட்டத்தின் மருத்துவ நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளிலும் பணியாற்றியதுடன் மாகாண சுகாதார சேவையிலும் பல்வேறு பதவி நிலைகளை வகித்து இறுதியாக தரமுயர்த்தப்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராக 2010 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி 62 வயதைப்பூர்த்தி செய்த இவர் இன்றுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .