2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

விவசாய போதனா ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கல்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத், கியாஸ் ஷாபி, வடமலை ராஜ்குமார்


கிழக்கு மாகாண விவசாய போதானா ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின்போது மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள்  மற்றும் உபகரணங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அன்வர், மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .