2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

தங்களது வீடுகளுக்கு திரும்பும் ஹபீப் நகர், தக்வா நகர் மக்கள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்
 
மூதூரிலுள்ள  கொட்டியாரக்குடாக் கடல்  கொந்தளிப்பால் கடல் நீர் புகுந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு கொட்டியாரக்குடா கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால்  ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய  கரையோரக் கிராமங்களினுள் கடல் நீர் புகுந்தது. இதனால் தங்களது வீடுகளை விட்டு இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர்.

இந்தக் கிராமங்களிலுள்ள குடியிருப்புக்களில் புகுந்திருந்த கடல் நீர் வற்றிவருவதைத் தொடர்ந்து இவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

இந்த நிலையில்,  உமர் பாறுக் வித்தியாலயத்தில் தங்கியிருந்த 60 குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமானோருக்கு   மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் ஆகியோர்  தமது சொந்த நிதியிலிருந்து சமைத்த உணவுகளை  வழங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .