2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

திருமலையில், பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில், பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞசிலுவை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக செஞசிலுவைச் சங்கக் கிளை நிறைவேற்று முகாமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அலுவலர் ராஜ்குமார்,  அகம் நிருவனத்தின் உதவி திட்ட இணைப்பாளர் கலாரதன், சமூக சேவைகள் திணைக்கள பிரதிநிதி விஜிதா, சமூக அபிவிருத்திக்கும் ஆய்வுக்குமான  நிருவனத்தின்  பிரதிநிதி ஜயலோஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐ.நாவின் மனித உரிமைகள் பிரகடனத்தின்போது கூறப்பட்ட பெண்களுக்கெதிரான எல்லா விதமான வன்முறைகளையும் இல்லாது ஒழிக்கும் கருப்பொருள் அடங்கிய  நிகழ்வுகளாக இது அமைந்தது.

இங்கு கலந்துரையாடிய பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கு பெண்கள் ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்க வேண்டியதுடன் தமது கிராமங்களில் உள்ள பெண்களை பாதுகாப்பாக வழி நடத்தவேண்டும். அத்துடன் எமக்குள் வலையமைப்புக்களாகவும் செயற்பட வேண்டும்' என தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான பெண்கள் சிலர் தமது அனுபவங்களை இவ் வேளையில் பகிர்ந்து கொண்டனர்.

'இவ்வாறான பெண்களுக்கு நாமே உதவுவோம்' எனும் பொருளில் சில சுய உதவிக்குழுக்கள் பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவித் தொகைகளை வழங்கினர்.

மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி நிர்மளா மற்றும் உதவி திட்ட இணைப்பாளர் நளினி ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு மூதூர் தம்பலகாமம் பட்டினமும் சூழலும் குச்சவெளி போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .