2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

திருகோணமலை பஸ் நிலையத்தில் பதற்றம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார், வடமலை ராஜ்குமார்


திருகோணமலை பஸ் நிலையத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன தங்களுடைய உறவுகளை கண்டறியும் குழு இன்று செவ்வாய்க்கிழமை நடத்திகொண்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

முகமூடி அணிந்துகொண்டு வந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளை கிழித்து எறிந்ததுடன் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

சம்பவத்தில் காணாமல் போன உறவுகளை கண்டறியும் குழுவின் அமைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .