2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வில்கம்வெஹர புனர்நிர்மாணத்துக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் தீக்கிரை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள வரலாற்றுப் பிரசித்திமிக்க வில்கம்வெஹர வாவியை புனர்நிர்மாணம் செய்வதற்காக எடுத்துவரப்பட்ட எஸ்கவேட்டர் ரக வாகனங்கள் இரண்டு மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று போன்றன இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால், 95 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். எழுவர் அடங்கிய இனந்தெரியாத குழுவினரே மேற்படி வாகனங்களை தீக்கிரையாக்கியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரும் கடற்படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில் வாகனங்கள் மூன்றும் முற்றாக சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X