2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வசதி குறைந்த பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நலன்புரிச் சங்கம், வசதி குறைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி உள்ளது. 

இந்நிகழ்வு, திருகோணமலை, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  இவ்வருடம் பல்கலைக்கு  தெரிவு செய்யப்பட்டு கற்கைநெறியினைப் தொடரும்; 22 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இப்புலமைப்பரிசிலானது, மாதாந்தம் 3000 ரூபாய் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரு மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி முதன்மை அதிதியாகவும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முன்நாள் அதிபர் மா.இராஜரெட்ணம், கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .