2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீதி ஒழுங்குகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Super User   / 2014 ஜனவரி 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நேற்று (13) மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

டேவிட் பீரிஸ் மோட்டார் தனியார் கம்பனியின் அனுசரணையில் மூதூர் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.பி.எம்.லியனகே   தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் மூதூர் பிதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரகீத் புத்திக சமரபால, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரவீந்து சில்வா, டேவிட் பீரிஸ் மோட்டார் தனியார் கம்பனியின் பிராந்திய முகாமையாளர் தனஞ்ஜிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வீதி ஒழுங்குகள் சம்பந்தமாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு விபத்தினை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.


  Comments - 0

  • T.M.RAHMATHULLAH Thursday, 23 January 2014 09:49 AM

    வாழ்க வளமுடன்!
    நான் திருகோணமலையில் வாழ்ந்து எழுபது வருடங்களாகிறது... அந்த அபிமானத்தால் இந்த செய்திகள் பார்க்க சந்தோஷம் ஏற்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X