2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மயூரன் (வயது 24) என்பவர் புதன்கிழமை (05) தனது வீட்டுக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குளிப்பதற்குச் சென்ற இவர் கால் தடக்கி கிணற்றில் விழுந்ததைக் கண்ட இவரின் குடும்பத்தார்,  சுழியோடிகளின் உதவியுடன் குறித்த இளைஞரை  கிணற்றிலிருந்து மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில் இவர் உயிரிழந்தார்.

ஸ்ரீகோணேஸ்வரா  இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர்,   நாளை நாடளாவிய ரீதியில் வழங்கவுள்ள கிராம அலுவலகருக்கான நியமனம் பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X