2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொடுவாய் மீன் உற்பத்திக்கு நோர்வே முதலீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்ரப் ஏ சமத்

வடக்கு கிழக்கு மக்களிடம்  மிகப்பிரசித்தி பெற்று விளங்கும் கொடுவாய் மீனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஆரம்ப கட்டமாக குச்சவெளி பிரதேசத்தில் 500 சதுர அடிப்பரப்பில் கொடுவாய் மீன் குஞ்சுகளை வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தமீன் திட்டத்தில் ஆர்வம் கொண்ட நோர்வேநாட்டு முதலீட்டாளர் குழு அண்மையில் கிழக்குமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வளங்களை பார்வையிட்டதுடன் திருகோணமலைக்குச் சென்று விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொடுவாய் மீன் வளர்ப்புத் திட்டத்தில் தமது ஆர்வத்தை வெளியிட்ட தூதுக்குழுவினர் நோர்வேயில் இந்த மீனுக்குரிய  சந்தை நிலவரம் பற்றி விவரித்தனர்.

இந்தத் திட்டத்தினை விரிவாக தொடங்குவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறு விவசாய அமைச்சரிடம் கோரிக்கை நோர்வே முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X