2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சாதனை பாராட்டு விழா

Kanagaraj   / 2014 மே 02 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி மாணவன் ரீ.எம்.ரோஷானின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று02 வெள்ளிக் கிழமை கல்லூரியின் மஹ்ருப் கலையரங்கில் இடம் பெற்றது.

42ஆவது ஆசிய பாடசாலை உதைப்பந்தாட்டப் போட்டிக்காக 18 வயதுக்கு குறைவான பிரிவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை அணி சார்பில் கிழக்கு மாகாணத்தில் தி- கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி மாணவன் ரீ.எம்.ரோஷான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டி எதிர் வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரைஇந்தோனேசியாவில் இடம் பெறவுள்ளது.

கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி அதிபர் ஏ.ஆர்.உபைத்துல்லா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா நகர சபைத் தலைவர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் , கிண்ணியா அதிபர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X