2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பன்மதவாச்சி பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை - புத்தளம் வீதியில் பன்மதவாச்சியில் யுத்த காலத்தில் மூடப்பட்ட பாடசாலையை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இப்பகுதி மக்கள் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம் பெயர்ந்து சென்றமையால் மாணவர்களது வரவு இன்றி பாடசாலை மூடப்பட்டது.

தற்போது மக்கள் இப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில், பாடசாலை இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் மாணவர்கள்  4 கி.மீற்றர் தொலைவில் உள்ள ஓளவை நகர் பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும் மாணவர்களின் நலன் கருதி பன்மதவாச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை மீள ஆரம்பித்து இப்பகுதி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என  அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், மற்றும் வலயக் கல்வி அலுவலக பொறியிலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .