2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

திருகோணமலையில் டெங்கொழிப்பு

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்,ஒலுமுதீன் கியாஸ் ஷாபி


திருகோணமலை, அன்புவழிப்புரத்திலுள்ள தி/ கலைமகள் மகா வித்தியாலயத்தை  அண்டிய வீடுகள் மற்றும் பொதுவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை (11) டெங்கொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி பாடசாலையை சுற்றியுள்ள 200 மீற்றர் பரப்பளவுள்ள பிரதேசத்தை  டெங்குநோய் தடுப்புப்  பிரதேசமாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர்  இன்றைய விழிப்புணர்வுக் கூட்டத்தில் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்புக் குழுவினர், இராணுவத்தினர், பொலிஸார்,  சுகாதாரப் பரிசோதகர்,  கிராம  அலுவலகர், பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து டெங்கொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், டெங்கு தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

திருகோணமலையில் மழைக்காலமாகையால், நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாகவும் இது டெங்கு நோயை தடுப்பதற்கான  முன்கூட்டிய  ஏற்பாடு எனவும் திருகோணமலை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .