2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூலை 22 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
வடமலை ராஜ்குமார், ரீ.கே.றஹ்மத்துல்லா,

திருகோணமலை, திருக்கடலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு1 இலட்சத்து 26,000 ரூபாய் பெறுமதியான மின்பிறப்பாக்கி ஒன்று திங்கட்கிமை (21) வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இம்மின்பிரப்பாக்கி பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மின்பிறப்பாக்கியை கையளித்து வைத்தார்.

இவ் ஆலயத்தில் நீண்டகாலமாக மின்பிறப்பாக்கியொன்று இல்லாமல் இருந்ததால் ஆலய நிர்வாகத்தினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை  கருத்தில் கொணடே இவ்வாலயத்திற்கான மின்பிறப்பாக்கியை வழங்கியதாக மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருக்கோணமலை நகர சபை உறுப்பினர் கா.கோகுல்ராஜ், கிழக்குமாகாண விவசாய அமைச்சின் கணக்காளர், மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .