2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹஸன் காலமானார்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எச்.ஏ.ஹுஸைன், அப்துல் பரீட், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி (வயது 64) செவ்வாய்க்கிழமை(12)  இரவு சுகயீனம் காரணமாக கண்டியில் காலமானார்.

கடந்த பல மாதங்களாக சுகயீனமுற்றிருந்த இவர், இந்தியாவிற்குச் சென்று சிகிச்சை பெற்று கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(12) இரவு புதன்கிழமை அவர் இறைபதமடைந்தார்.  

சிறந்த மார்க்க அறிஞரும்  எழுத்தாளரும் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான இவர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில்  திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு  நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தோதலில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில்  திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகத் வெற்றிபெற்று அந்த சபையின் சபை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பல நூல்களை எழுதி வாசகர் மத்தியில் பிரபலமான இவர், திருகோணமலை மாவட்டத்தில் ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஒன்றை ஸ்தாபித்து அதன் மூலம் அனாதைச் சிறுவர்களுக்கான பராமரிப்பு  இல்லம், விதவைகளுக்கான சமூக மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

இவரது ஜனாஸா இன்று கிண்ணியாவுக்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா தெரிவித்தார்.

  Comments - 0

  • Mohamed Jaleel Wednesday, 13 August 2014 11:07 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .