2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹஸனின் வெற்றிடத்துக்கு லாஹீர் தெரிவு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சுகவீனம் காரணமாக காலமான  கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவியின் வெற்றிடத்திற்கு  சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹஸனுக்கு அடுத்தப்படியாக கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தார்.

இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூரின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .