2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவிகாலம் நீடிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சின் செயலாளரின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமா லெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை புரிந்து வரும் கே.பத்மநாதன் எதிர்வரும் 2015.01.6 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைகளின் தேசிய கொள்கைக்கு அமைவாக கடந்த 12 வருடங்கள் தொடர்ச்சியாக இவர், சேவை புரிந்து வருவதுடன் எதிர்காலத்திலும் கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்கு இவரது சேவை தேவைப்படுவதால் கே.பத்மநாதனை எதிர்வரும் 2015.01.07 ஆம் திகதியில் இருந்து மீள்சேவை நியமன அடிப்படையில் பணிக்கு அமர்த்துமாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நசீர் அகமட் நசிர் கிழக்கு மாகாண அமைச்சரவையை கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான சிபாரிசினை அமைச்சரவை வழங்கியதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான உதுமாலெப்பை தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X