2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பள்ளிவாசலை புனரமைத்து தர இராணுவம் இணக்கம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, பட்டணமும் சூழலும் வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கரிமலையூற்று பள்ளிவாசலை படையினர் புனரமைப்புச் செய்து தர இணக்கம் தெரிவித்துள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

சேதமடைந்துள்ள பள்ளிவாசலை சென்று பார்ப்பதற்கு முதலமைச்சரை மாத்திரம் தனியாக அவ்விடத்துக்கு படையினர் அழைத்துச் சென்றனர்.

இது முஸ்லிம்களின் பாரம்பரிய வாழிடம் என்பதையும் முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய மிக மோசமான சம்பவம் இது எனவும்  அவர் தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதி இரவு குறித்த பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .