2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொது அலுவலகங்களில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ்.சாந்தா தெரிவித்தார்.

உப்புவெளி கிராம அலுவலகர் அலுவலகமும் அதன் சுற்றாடலும் கிராம மாதர் சங்க உறுப்பினர்களால் இன்று வியாழக்கிழமை   சிரமதானம்  செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உப்புவெளி கிராம அலுவலகர்; பிரிவில் அடங்கும் செம்பியன் தோட்டம், சோலையடி மற்றும் அலஸ் தோட்டக் கிராமங்களைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள் இந்தச் சிரமதானத்தில் பங்கேற்றனர்.

தற்போது தொண்டுப் பணிகள் மறைந்து எல்லாக் காரியங்களிலும் பணத்துக்காக பணிபுரிகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இத்தகைய இயந்திரமயமான காலகட்டத்தில் மக்கள் பாரம்பரியத்தையும் தொண்டுக்காக தமது நேரத்தை அர்ப்பணிப்பதையும் மீண்டும் வழக்கத்துக்கு  கொண்டுவர வேண்டும் என்பதற்காக தாம் இந்தச் சிரமாதானப் பணிகளில் மாதர் சங்க உறுப்பினர்களை ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X