2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பசும்பால் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

\
-ஏ.எம்.அப்துல் பரீத், எஸ்.கீதபொன்கலன்


நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் வழங்கும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.

கிண்ணியா கல்வி வலயத்துக்கான பிரதான நிகழ்வு, கிண்ணியா  அல்- இஹ்சானியா மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி பரீனா றிஸ்வியின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரத அதிதாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மாணவர்களுக்கு பசும்பால் வழங்கி வைத்தார்.  

இதேவேளை, திருகோணமலை சர்தாபுர தர்மராஐ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதல்வர் ஆரியவதி கலபத்தி மற்றும் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் மாணவர்களுக்கு பால் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளில் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் 5 நாட்களும் பால் வழங்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 பாடசாலை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர். இத்திட்டத்துக்;கென கல்வி அமைச்சு ரூ. 5.4 மில்லியனை மாகாண கல்வி அமைச்சிற்கு வழங்கியுள்ளது.



                              


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .