2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நடைபவனி

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். கீதபொன்கலன்


திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட வீதி நடைபவனி திருகோணமலையில் இன்று(13) நடைபெற்றது.

ரோமன் கத்தோலிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி அப்போஸ்தலிக்க கார்மல் சபை என்ற கன்னியர் சபையினால் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

1960ஆம் ஆண்டில் மிசனரி பாடசாலைகள் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுசெல்லப்பட்டபோதும் இன்று வரை அப்போஸ்தலிக்க கார்மல் சபையைச்சேர்ந்த கன்னியாஸ்திரிகளே கல்லூரியின் அதிபர்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நடைபவனிக்கு திருகோணமலை லயன்ஸ் கழகத்தினர் அனுசரணை வழங்கியதுடன் நடைபவனியிலும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X