2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொது சுகாதார பரிசோதகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.மன்சூர்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.சசிகுமார்


'பொது சுகாதார பரிசோதகர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு காரணமான பொது சுகாதார பரிசோதகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் இவருக்கு இலகுவான விசாரணைகளை செய்து உதவியளித்துள்ளனர்' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே(21) அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர் மீது பலகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர் கடந்த 5 வருடங்களில் அதிக இடங்களில் கடமையாற்றி வந்துள்ளார். திணைக்களம் இவருக்கு உதவி செய்யும் விதமாக விசாரணைகளை செய்து அருகில் உள்ள கல்முனை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது. இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அல்ல. ஒழுக்காற்று இடமாற்றமும் இல்லை. அதிகாரிகள் இவருக்கு உதவியே செய்துள்ளனர்.

இந்த பரிசோதகர் திணைக்களத்தையும் ஊழியர்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்துள்ளார். இவருக்காக தொழிற்;சங்க போராட்டத்தில் பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளமை வருத்தத்தை தருகின்றது.

குறித்த பொதுசுகாதார பரிசோதகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் இலஞ்;சம் வாங்குவதில் முன்னோடி.

இதற்கான ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. மாடு அறுக்கும் தொழுவத்தில் மாதம் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வீதம் இலஞ்சம் பெற்று வந்தள்ளமை எமக்கு ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளது. இவர் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றும் நபர் ஒருவர், கடந்த 9ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரின் இடமாற்றம் முறையற்றதென கூறி அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கிழக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (20) முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X