2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

உடைந்த பாலத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தனால், திருகோணமலை மாவிலை ஆறு அணைக்கட்டு உடைப்பு எடுத்துள்ளது. இதன் காரணமாக கிண்ணியா குறிஞ்சக்கேணி பாலம் சேதமடைந்துள்ளது.

இதனை உடனடியாக புனரமைப்பதற்கான நடவடிக்கையை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ. மஜித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இதைனையடுத்து, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாலம் புனரமைப்புச் செய்யப்படுகிறது.

இதன் முதற்கட்ட வேலைகளை முதலமைச்சர் நஜிப் ஏ. மஜித் சனிக்கிழமை (03) ஆரம்பித்து வைத்தார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .