2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

Kanagaraj   / 2015 ஜனவரி 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, கோணேஸ்வரம் கடற்பகுதியில் சட்ட விரோத படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கும் சிறிய வள்ளங்களைப் பயன்படுத்தி தொழில் செய்வோருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (15) காலை முறுகல் நிலை தோன்றியது.

இப்பிரதேசத்தில் சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறிய வள்ளங்களில் தொழில் செய்வோர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து, சட்ட விரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றையும் அதன் உபகரணங்களையும் கைப்பற்றி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது, படகில் 100 கிலோவுக்கும் அதிகமான  மீன்கள் காணப்பட்டன குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .