Kogilavani / 2015 ஜனவரி 22 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்னிற வியாழக்கிழமை(22) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா, முனைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான செயிலத்தும்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த 18 ஆம் திகதி சீமெந்து ஏற்றி வந்த ட்ரக் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக் குறித்து முழுமையான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்.
15 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
9 hours ago