Thipaan / 2015 ஜனவரி 28 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரையும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை (28) நடத்தியது.
திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்னால் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 11.00 மணிவரை நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கு கொண்டோர் பல்வேறு விதமான பதாதைகளையும் தாங்கி இருந்தனர். நிலமையைச் சமாளிக்க பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
இதேவேளை, தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு முன்னால், பிரதேச செயலாளர் எமக்கு வேண்டாம். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோசங்களுடன் பதாதைகளைத் தாங்கியவாறு ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் காலை 10.00 மணி தொடக்கம் வீதியில் இறங்கினர். காலை முதல் இப்Nபுhராட்டத்தில் ஈடுபட்டவரகள் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் காணி விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்கள். இதன் பின்னரே அவர்கள் வீதிக்கு வந்தனர்.



15 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
9 hours ago