Thipaan / 2015 ஜனவரி 29 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.அப்துல் பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் சமுர்த்தி, திவிநெகும திட்டங்களின் மூலம் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்பாடுகளை பரிசீலனை செய்ய தேவையான குழுக்களை நியமிக்குமாறு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோருக்கு, நேற்று புதன்கிழமை(28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இம்ரான் மஹ்ரூப் இக்கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 107 மில்லியன் ரூபாவுக்கு அலுவலக நடைமுறைகளுக்கு அப்பால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்துக்கு தகுதியான உத்தியோகத்தரை நியமிக்காது தகுதிகுறைந்தவர்களை நியமித்து பல்வேறு கையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனைவிட செவ்வாய்க்கிழமை கிண்ணியா பிரதேசத்தில் பெறுமதி குறைந்த மீன்பிடி உபகரணங்கள் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக பொதுமக்களால் புகார் செய்யப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
9 hours ago