2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தலைமைத்துவ திறன் விருத்தி பயிற்சி

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ திறன் விருத்தி பயிற்சிநெறி நேற்று செவ்வாய்க்கிழமை உப்புவெளி மகளிர் சங்கத் தலைவி சிவலிங்கம் சாந்தா தலைமையில் இடம்பெற்றது.

உப்புவெளி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் இந்த தலைமைத்துவ திறன் விருத்தி பயிற்சிநெறியில் கலந்துகொண்டார்கள்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சிநெறியை அந்நிறுவனத்தின் திட்ட அலுவலர் சந்திரசேகரம் கௌசல்யா மற்றும் மாவட்ட இணைப்பாளர் வடமலை ராஜ்குமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X