2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலவச துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 28 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில், வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு மூதூர் அல்மினா மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை(28)  இடம்பெற்றது.

கடந்தகால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களிலிருந்து  தூர பாடசாலைகளுக்கு நடந்து  செல்லும் மாணவர்களுக்கு, பெரண்டினா நுண்நிதி நிறுவனத்தினால்  சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இதன் போது மூதூர், சம்பூர், சேனையூர், பட்டித்திடல், முன்னனம்பொடி வெட்டை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அதிதிகளாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் அகீலா கனகசூரியம், மூதூர் பிரதேச செயலாளர் எம்.யூசூப், உதவி பிரதேச செயலாளர் எம்.தாஹீர்,பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X