Thipaan / 2015 மார்ச் 30 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
காசநோய்- 2015 விழிப்புணர்வு ஊர்வலம் கிண்ணியா பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
உள்நாட்டுப் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில், கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் காசநோய் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது அதிகரித்த புகைப்பழக்கம், மதுபழக்கம் காரணமாக இந் நோய் ஏற்படுவதாகவும் இருமல், மூச்செடுப்பதில் சிரமம், இளைப்பு, விசில் சத்தம் ஏற்பட்டால் சுவாச நோய் சிகிச்சை பிரிவுக்கு வருமாறு கோரப்பட்டுள்ளது.
இவ் ஊர்வலத்தில் பொலிஸார், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .