2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மூதூர் பிரதேச சபை கட்டட திறப்பு விழா

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை, மூதூர் பிரதேச சபையின் அலுவலகக் கட்டடத் தொகுதி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் திங்கட்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

புறநெகும திட்டத்தின் கீழ், 40 மில்லியன் ரூபாய் நிதியில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ம். ஹரீஸ் பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X