Thipaan / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ், வீடு மற்றும் காணி அற்றவர்களுக்கு நூறு வீடுகளை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு கிண்ணியாவில் திங்கட்கிழமை (31) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய ரீதியில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ் வேலைத் திட்டத்தில் மூதூர் தொகுதிக்கு 300 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் கிண்ணியா பிரதேசத்தில் 100 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக மணியரசங்குளம், வட்டமடு, மஜீத் நகர் போன்ற பிரதேசங்களில் காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டடுள்ளன.
இந்த நிகழ்வில், உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஃறூப், திருமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஃறூப் பிரதேச செயலளர் எம்.ஏ.அனஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .