Princiya Dixci / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களை கிழக்குக்கு அழைத்து வந்து முதலீடு செய்து தனியார் நிறுவங்களை அமைத்து அதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்காக இருகட்ட சந்திப்புக்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சர் காரியாலயத்திலும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் காரியாலயத்திலும் வியாழக்கிழமை (02) நடைபெற்றது.
இச்சந்திப்பு நிகழ்வுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த தொழிலதிபர்களான முஸ்தாக் முஹம்மட் மற்றும் சிமோன் பின் சஹ்மிட் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
திருகோணமலை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் முதலமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .