Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைக்கப்பட்டவர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு நேற்று சனிக்கிழமை நிறைவு பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த செயலமர்வை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார ஆரம்பித்துவைத்;தார்.
அலுவலக நிர்வாக நடைமுறைகள் தொடர்பான பல விடயங்கள், பதவிநிலை போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது
செயலமர்வின் இறுதியில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஷ்வரன் உட்பட பல உயர் அதிகாரிகள் இந்தச் செயலமர்வில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு விரிவுரைகளை நடத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .