Suganthini Ratnam / 2015 மே 06 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வீட்டுக்கு வீதியால் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, பாம்புக் கடிக்கு உள்ளான செல்வரெட்ணம் தமிழ்ப்பிரதி (வயது 25) என்ற பெண் மயக்கமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பெண் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாக வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பெண், அங்கிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தற்சமயம் இவரின் உடல் நிலை தேறியுள்ளதாகவும் ஆபத்தை கடந்துள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
26 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago