Princiya Dixci / 2015 மே 17 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற விரும்பும் ஆசிரியர்களின் நலன் கருதி கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம், அதிபர் போட்டிப் பரீட்சைக்கான முன்னோடிக் கருத்தரங்குகளை திருகோணமலை மற்றும் மூதூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
துறைசார்ந்த முன்னோடி வளவாளர்களால் நடத்தப்படும் இக்கருத்தரங்குகளில் அதிபர் தேர்வுக்குத் தோற்றவிருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 21ஆம், 28ஆம் திகதிகளும் அடுத்த மாதம் 04ஆம் திகதியும் மாலை 04 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையில் கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் 17ஆம், 24ஆம், 31ஆம் திகதிகளும் அடுத்த மாதம் 07ஆம் திகதியும் காலை 09 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago