Thipaan / 2015 மே 17 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக திருகோணமலையிலும் முள்ளிவாயக்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.10 மணிக்கு சிவன்கோயிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னால் இந்நினைவேந்தல் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அமைச்சர் தூபத்தை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரமுகர்களால் மெழுகுதிரி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண சபை திருகோணமலை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்னன், திருகோணமலை நகர சபையின் முன்னாள் தலைவர் க.செல்வராசா, சி.நந்தகுமார். த.கௌரிமுகுந்தன், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் ச.விஜயகாந் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டார்கள்.


27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago