Sudharshini / 2015 மே 23 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச வேலையில்லா பட்டதாரிகள், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப்பை அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (23) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, பட்டதாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப்,
இன்றைய அரசியல்வாதிகள் மௌனமாக நின்று தன்னை பாதுகாத்து கொள்கின்றார்கள். 65 வீத வாக்குகள் உங்களைப் போன்ற இளைஞர்களின் வாக்குகள். அதிலும் பெண்களின் வாக்குகள் தெளிவாக அளிக்கக் கூடிய வாக்குகளாகும்.
தேசிய மட்டத்தில் உங்கள் பிரச்சனை இன்னும் புரிந்துக் கொள்ளப்படவில்லை. நாடாளுமன்றத்தில் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எமது மாவட்ட நாடாளுமன்ற கதிரை வெறுமனே இருந்த காட்சியை காணக்கூடியதாக இருந்தது.
மாகாண சபைகளில் கூட உங்களின் ஆதங்கள் தெளிவாக பேசப்படவில்லை. இந்த அடிப்படையில்தான் இவ்வைபம் இன்று எனது இல்லத்தில் இடம்பெறுகின்றது.
இவ்விடயம் குறித்து நாட்டின் ஜனாதிபதியுடன் பேசிய பின்னர், இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கதைப்பதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.
உங்கள் வாக்குகள் எங்களுக்கு அளிக்கப்படவேண்டும், எங்கள் தலைமைக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. நீங்கள் முதலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்றார்.
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago