Sudharshini / 2015 மே 24 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வடமலை ராஜ்குமார்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண பெண்கள் அமைப்புக்கள் இணைந்து திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாச உறுப்பினர்கள், திருகோணமலை அமரா குடும்பத் தலைமையிலான பெண்கள் ஒன்றியம் மற்றும் பொக்கிஷம் பெண்கள் அமைப்பு என பல பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனனும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
இவ்வமைப்பு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில், அமைதியான முறையில் பேரணி ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத பொலிஸார், 23 ஆம் திகதி காலை பேரணிகளை நடத்த தடை விதித்தனர்.
எனினும், பெண்கள் தமது போராட்டத்தை அகிம்ஷை வழியில் வெளிப்படுத்திய பின், உற்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அளுவலகத்தின் முன் பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை தொடர்ந்து ஆளுனருக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்க முயன்றனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இல்லதா காரணத்தால் ஆளுநரின் பணிப்பின் பெயரில் அவ்விடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண வீதி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சரான ஆரியவதி கலபதியிடம் தமது மகஜரை கையளித்தனர்.
அதனையடுத்து, அம்மகஜர் அனைத்து பெண்களுக்கும் வாசித்து காட்டப்பட்டதுடன் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
.jpg)

.jpg)
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago