Thipaan / 2015 மே 24 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லரீப் சிஹானை தாக்கியவர்களைக் கைது செய்வதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமல தர்மவின தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) இனந் தெரியாத நபர்களினால் கூரிய ஆயுதங்களினால் வைத்திய அதிகாரி தாக்கப்பட்டிருந்தார்.
இது சம்மந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட தோப்பூர் பிரதேச முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு சனிக்கிழமை(23) தோப்'ர் பொது நூலகத்தில் இடம் பெற்றது.
அங்கு உரையாற்றய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இப் பிரதேசம் கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பெரும் இழப்புக்களை சந்தித்த பிரதேசமாகும். இன்று யுத்தம் முடிவடைந்து நீங்கள் எல்லோரும் எந்த வித பிரச்சினைகளும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றீர்கள்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி இனந் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றார்'என கூறினார்.
'இது தனிப்பட்ட ஓரிருவர் செய்த செயற்பாடாகும். இதற்காக முழுத் தோப்பூர் பிரதேசத்தையும் குற்றம் சுமத்த முடியாது'.
'இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பற்றி ஏதும் தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் எமது பொலிஸ் நிலையத்தோடு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். நாங்கள் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என்று தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி வைத்தியசாலையில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அறைக்கதவினைத் தட்டிய இனந் தெரியாத நபர்கள், தமது உறவினர் ஒருவர் விசம் அருந்தி உள்ளார் ஆதலால் கதவினை திறக்குமாறு வைத்தியரிடம் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் கதவினை திறந்த போது முகத்தினை மறைத்திருந்த இருவர் வைத்தியரை கூரிய ஆயதத்தினால் தாக்கி விட்டு தப்பித்துச் சென்றதாக வைத்தியர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago