2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொதுமக்களிடமிருந்து நிதி சேகரித்த இரு பெண்களுக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சையளிப்பதுக்கு பணம் சேகரிப்பதாக பொய் கூறி, சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடமிருந்து பணம் சேகரித்த பெண்கள் இருவரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் இன்று (30) உத்திரவிட்டுள்ளார்.

குறித்த பெண்கள் இருரையும்; ஹட்டன் நகரில் வைத்து ஹட்டன் பொலிஸார் வியாழக்கிழமை (29) கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகல், கல்கமுவ மீகெலாவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.பீ.பிரேமாவதி (55) மற்றும் குசும் குமாரி (40) என பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுவனின் புகைப்படத்தில் சிறுவனின் முகத்தை விகாரன வகையில்; மாற்றம் செய்து, சிறுவன் தற்போது அநுராதபுரத்திலுள்ள சிறுவர் நிலையத்தில் சிகிச்சைபெற்று வருவதாக கூறியே இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X