Suganthini Ratnam / 2015 ஜூன் 01 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்கள் சோர்ந்துபோயுள்ளார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் புதியவர்கள் பழையவர்களுக்கு முன்னுரிமை வழங்கி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக மாற்றி அமைக்கவேண்டும் என்று பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
ஜமாலியா விளையாட்டுக்கழக மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற பட்டணமும்சூழல் பிரதேசத்துக்கான மு.கா. மத்திய கிளை புனரமைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எனது அரசியல் பிரவேசம் ஒரு விபத்தை போன்றது. பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டு செயற்படுகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் பல தியாகங்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது' என்றார்.
'எனது அரசியல் பயணத்தில் பல சவால்களை நான் எதிர்கொண்டுள்ளேன். கட்சித் தலைமைத்துவத்துக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் என்னை நெறிப்படுத்தி கட்சித் தலைவருக்கு பக்கத்துணையாக இருக்குமாறு அடிக்கடி ஆலோசனை வழங்கியவர்கள் கட்சிக்காக போராடியவர்களே' எனவும் அவர் கூறினார்.
19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago