Thipaan / 2015 ஜூன் 03 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் விஷேட கல்வி பாட ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 3 ஆசிரியர்களையும் உடனடியாக விஷேட தேவையுடைய அலகுகள் காணப்படும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் இன்று புதன்கிழமை (03) அறிவித்துள்ளார்.
விஷேட தேவைப்பாடுடைய மாணவர்களுக்கு கல்வி போதிக்காமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மத்திய கல்வி அமைச்சின் நுனுஃ1ஃ28ஃ2ஃ249 இலக்க 2012.11.23ஆம் திகதிய 42ஃ2012 சுற்று nநிருபத்துக்கு அமைய, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் பிரகாரம் கிண்ணியா சிறாச் நகர் கனிஷ்ட வித்தியாலயம், கிண்ணியா ரீ.பி.ஜயா வித்தியாலயம், கிண்ணியா குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் விசேட கல்வி தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று ஆசிரியர்களுமே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.
விஷேட கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள கிண்ணியா அல் ஹிரா மகா வித்தியாலயம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா அல் முஜாஹிதா வித்தியாலயம் ஆகிய பாடசாலைககளுக்கு இடமாற்றக் கடிதத்தினை வழங்கி இதுகுறித்து தனக்கு அறிவிக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago