Thipaan / 2015 ஜூன் 07 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
உலக சுற்றாடல் தினத்தையொட்டி, கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் முகாமைத்துவ திணைக்களம், சுற்றாடல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுடன் இணைந்து நிலாவெளியிலுள்ள புறாமலை தீவை பாதுகாப்போம் என்னும் பெயரில் செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை (06) முன்னெடுத்தனர்.
இதன்போது திருகோணமலை வலய கல்வி பிரிவில் உள்ள 9 பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 20 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், நிலாவெளி கடற்கரையில் எளிமையான வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பாடசாலைகள் ஒன்பதுக்கும் தலா 10,000 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி பிரதம அதிதியாக இந்நிகழ்வில் பங்கு கொண்டு கண்காட்சியினைத் திறந்து வைத்தார்.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ந.பிரதீபன், குச்சவெளி பிரதேச செயலாளர் ப.தனேஸ்வரன் ஆகியோர் மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.



4 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago