Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சம்பூர் காணிப் பிரச்சினை விவகாரம் தொடர்பில் தலையிட்டு அம்மக்களின் குறைகளை தீர்த்து காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னின்று செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு 9 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற சம்பூர் பகுதி மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதில் பெரும் சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தாங்கள் வசித்த இடங்களை இழந்து வாழும் அம்மக்களின் பிரச்சினையில்இ தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து குரல் கொடுத்துவருவதையும் பாராட்டுகிறேன். இவ்வேளைஇ அம்மக்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ எடுத்த வழிமுறைகளும் பாராட்டுக்குரியது.
ஆளுநரின் இந்நடவடிக்கை போன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் சகல வேலைப்பாடுகளிலும்; ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மட்டக்களப்பு மாவட்டப் பிரச்சினைகளைத் தொடர்ந்து கூறிவருகின்றார். அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிலும் ஆளுநர் சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும்.
எனவே, கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைகளில்; எந்த தடைகளும் இருக்காது.இனிமேலும் கிழக்கில் தடையாக யார் இருந்தாலும்இ அதனை உடைத்தெறிந்து மக்கள் பணியை சரிவர நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக செயற்பட்டுவருகிறேன்' என்றார்
22 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
1 hours ago