Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தில் பணியாற்றிவந்த கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்த வை.ஜி.எல்.பண்டார (வயது 22) என்ற இராணுவச் சிப்பாய் விளம்பரப்பலகைக் கம்பமொன்றுடன்; மோதுண்டு உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையையொட்டி நேற்று சனிக்கிழமை தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர், கந்தளாய்ப் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மேற்படி கம்பத்துடன் மோதுண்டுள்ளார். இதன்போது, படுகாயமடைந்த இவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
22 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
1 hours ago