Suganthini Ratnam / 2015 ஜூன் 16 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்தினுள்; நுகர்வோர் அதிகாரசபையின் சட்டங்களை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 180 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டம் அறவிடப்பட்டதாக மாகாண நுகர்வோர் அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் எச்.எல்.அப்துல் குத்தூஸ் திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, குறிக்கப்பட்ட விலையை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்றமை, தொகுதிக் குறியீடு பொறிக்கப்படாமை, காலாவதியான பொருட்களை விற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 180 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், திருகோணமலையில் 72 கடை உரிமையாளர்களிடம் இரண்டு இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவும் மட்டக்களப்பில் 69 பேரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாவும் அம்பாறை மாவட்டத்தில் 39 கடை உரிமையாளர்களிடம் 93,500 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago