Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஏ.எம்.ஏ.பரீத்
யாழ்ப்பாணம், புங்குடுதீவை சேர்ந்த மாணவியின் கொலையை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியும் கிழக்கு மாகாணசபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபையின் அமர்வு நேற்று செவ்வாய்;க்கிழமை நடைபெற்றபோதே, இந்தப் பிரேரணையை மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்வைத்தார்.
மாணவியின் கொலையோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, கொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago