Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.நிரோஷினி,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எஸ்.எம்.ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ், ஏ.எஸ்.எம்.முஜாஹித், பைஷல் இஸ்மாயில்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நல்லாட்சி ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வில்பத்து மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு சபை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காலை 10.30 க்கு மீண்டும் கூடியது. இதன்போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் வில்பத்து மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பில் சபையில் தனி நபர் பிரேரணையை முன்வைத்தனர். பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது, வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கடந்த காலத்தில் ஆட்சி நடத்தி வந்த எந்த அரசாங்கமும் உதவி செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தீவிர முயற்சியால் பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், சில இனவாதிகளின் செயற்பாடுகளினால் அம்முயற்சி இழுபறி நிலையிலுள்ளது' என்றார்.
எனவே, நல்லாட்சி ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,
நல்லாட்சி ஏற்பட்டுள்ளது என்று மார் தட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம், வடபுல முஸ்லிம் மக்கள் படும் அவலத்தை அறிந்தும் கண்டும் காணாது போல் செயற்பட்டுவருகின்றது. இதுதான் நல்லாட்சியா?
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பச்சைக்கொடி காட்டவேண்டும். என்றார்.
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago